ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவின் பொருளாதாரம் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எதிர்பார்ப்பை விட வேகமாக வளர்ந்துள்ளது.
அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
பொருளாதார வல்லுநர்கள் இது 4.8 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், சீனாவின் இந்த மீட்சி ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
1991க்குப் பிறகு மிகக் குறைந்த இலக்கான 4.5% – 5% என்ற வரம்பை சீனா நிர்ணயித்திருந்த போதிலும், முதல் காலாண்டிலேயே இந்த இலக்கை எட்டியுள்ளது.
ஈரான் போர் எதிரொலி: சீனப் பொருளாதாரம் எதிர்பாராத வளர்ச்சி
