திரைப்படக் கலாசார விழா நிங்போ நகரில் துவக்கம்

Estimated read time 0 min read

தேசிய திரைப்பட நிர்வாகத்தின் வழிகாட்டலின் கீழ், சீன ஊடக குழுமம் மற்றும் ஜெஜியாங் மாகாண மக்கள் அரசு கூட்டாக நடத்திய திரைப்படக் கலாசார விழா 15ஆம் நாள் நிங்போ நகரில் துவங்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரை துறையின் துணை அமைச்சரும், சீன ஊடக குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங், ஜெஜியாங் மாகாணத்தின் கட்சிக் கமிட்டியின் துணைச் செயலாளரும், நிங்போ நகரத்தின் கட்சிக் கமிட்டியின் செயலாளருமான வாங் செங் ஆகியோர் இவ்விழாவின் துவக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2026 திரைப்படப் பொருளாதார வளர்ச்சி ஆண்டை வாய்ப்பாக கொண்டு, திரைப்படம் பிளஸ் பொருளாதாரம் பற்றிய புத்தாக்க நடவடிக்கைகளை அறிமுகம் செய்யும் இந்நிகழ்ச்சி, மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் திரைப்படக் கலாசார விருந்தை அளிக்கிறது.

திரைப்படம் பிளஸ் சுற்றுலா என ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சர்வதேசப் பரிமாற்றத் தளத்தை உருவாக்கும் விதமாக, வசந்தகாலத்தில் சீனா: திரைப்படங்களைப் பார்த்தல், அழகிய காட்சிகளை பார்வையிடுதல் என்ற நடவடிக்கையை சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் நடத்துகிறது.

You May Also Like

More From Author