டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Estimated read time 0 min read

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக, துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சாலைகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் தேங்கும் தூசி, வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை கட்டுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதிகளுக்கான சிறப்பு செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாசு தடுப்பு விதிகளை கடுமையாக அமல்படுத்தவும், வெளிநாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், கள அளவில் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

You May Also Like

More From Author