பெரும் உள்ளார்ந்த ஆற்றல் கொண்ட சீனப் பொருளாதாரம்

நிதி அறிக்கையின்படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சீனப் பொருளாதார மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.0 விழுக்காடு அதிகமாகும்.

உலகத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவின் மொத்த பொருளாதார அளவு 140 டிரில்லியன் யுவானைத் தாண்டியுள்ளது. இந்த அடிப்படையில் 5.0 விழுக்காடான அதிகரிப்பைப் பெற்றது மதிப்பிற்குரியதாக உள்ளது. மேலும், சீனப் பொருளாதாரத்திலுள்ள நிலைப்பு, புத்தாக்கம், உறுதி ஆகிய 3 தன்மைகள், ஆண்டிற்கான அதிகரிப்பு இலக்கை நனவாக்குவதற்கு சிறந்த அடிப்படையை உருவாக்கியுள்ளன.  

தாராள வர்த்தக மண்டலங்கள் சீராக வளர்ந்து வருகின்றன. சீனச் சர்வதேச நுகர்வோர் பொருட்காட்சி, சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சி ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன. மேலும், மே முதல் நாள் தொடங்கி, சீனாவுடன் தூதாண்மை உறவு கொண்ட 53 ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுங்கவரி விலக்கச் சலுகையை சீனா வழங்கியது. சீனா, உலகத் தொழிற்சாலையாக மட்டுமல்லாமல், உலகச் சந்தையாகவும் விளங்க விரும்புகிறது என்று இது காட்டியுள்ளது.

நிப்பான் பெயிண்ட் (சீனா) நிறுவனத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், தயாரிப்புத் தொழிற்துறையை உயர்நிலையாக மேம்படுத்துவதை சீன அரசு பெரிதும் முன்னேற்றி, நிறுவனத்துக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அதனால், இந்நிறுவனத்தின் உலகளாவிய ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அம்மையார் கூறுகையில், உலகம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கும் சூழ்நிலையில், சீனப் பொருளாதாரம் பெரும் உறுதித்தன்மை மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author