உக்ரைன் பிரச்சினையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்யும் வகையில், ரஷிய மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ரியாத் பேச்சுவார்த்தை 18ஆம் நாள் நடைபெற்றது.
முன்னதாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் 17ஆம் நாள் பாரிஸ் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், உக்ரைன் நிலைமை குறித்து விவாதம் நடத்தினர்.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் 18-ஆம் நாள் கூறுகையில், அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்கிறது என்று தெரிவித்தார்.
அதே வேளையில், தொடர்புடைய அனைத்து தரப்புகளும் உரிய நேரத்தில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.