இந்தியா-தென் கொரியா இடையே 2030க்குள் 50 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு நிர்ணயம்  

Estimated read time 1 min read

பிரதமர் நரேந்திர மோடியும், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கும் டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினர்.
உலகளாவிய மோதல்கள் மற்றும் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உலகிற்கு வலியுறுத்துவதாக பிரதமர் மோடி கூட்டறிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் முக்கிய தொழில்நுட்பத் துறைகளில் பிணைப்பு மேலும் வலுவடைந்துள்ளது.
சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி மற்றும் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் தென் கொரியா இணைந்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிறது.

You May Also Like

More From Author