சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எத்தியோபியா ஆகிய 5 நாடுகள் ஜனவரி முதல் நாள் பிரிக்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக மாறியுள்ளன.
பிரிக்ஸ் அமைப்பில் இணைவது, நாட்டின் உள்ளார்ந்த ஆற்றலைத் தட்டியெழுப்பவும், ஒத்துழைப்பு மூலம் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றவும் உதவும் என்று இந்த நாடுகளின் நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் கூறியதோடு, இவ்வமைப்புக்குப் புதிய உயிராற்றலை ஊட்ட விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கத்தால், வளரும் நாடுகளின் குரல் வலுவடைந்து, உலக கட்டமைப்பின் மாற்றத்தை தூண்டிவிடும்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், பிரிக்ஸ் நாடுகளைப் பிரதிநிதியாகக் கொண்ட புதிய சந்தை வாய்ப்பு பெற்ற நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்டு வளர்ச்சியால், உலகின் நிலப்பரப்பு அடிப்படையில் மாற்றப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
மேலும், உலக நிர்வாகமும் இதனால் நியாயமான திசை நோக்கி முன்னெடுத்துச் செல்வதாகவும், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இது மேலும் பெரும் பங்காற்றுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.