பஹல்காம் தாக்குதல் நினைவு தினம்: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி..!!

Estimated read time 0 min read

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் பலியான நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு இதே நாளில், பஹல்காமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் பலியான அப்பாவி உயிர்களை நாம் நினைவுகூர்கிறோம்.

அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள். இந்த இழப்பைத் தாங்கிக்கொண்டு மீண்டு வர முயலும் குடும்பங்கள் பற்றிய சிந்தனைகள் எனது மனதில் இருக்கிறது. ஒரு தேசமாக, துயரத்திலும் உறுதியிலும் நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author