ஆசிய-பசிபிக் செய்தி ஊடக ஒத்துழைப்புக் கூட்டாளித் திட்டத்துக்கான ஆயத்த ஆணையம் நிறுவல்

Estimated read time 1 min read

ஆசிய-பசிபிக் செய்தி ஊடக மன்றக் கூட்டம் 5ஆம் நாள் ஷென்சென் நகரில் துவங்கியது. துவக்க விழாவில், ஆசிய-பசிபிக் செய்தி ஊடக ஒத்துழைப்புக் கூட்டாளித் திட்டத்துக்கான ஆயத்த ஆணையம் நிறுவுவதாக அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம், இப்பிரதேசத்தில் செய்தி ஊடகங்களுக்கிடையில் ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு, உயர்நிலைப் பேச்சுவார்த்தை, இசையான ஒளிபரப்பு, தொழில் நுட்பப் புத்தாக்கம், பயனுள்ள ஒத்துழைப்பு ஆகிய 4 மேடைகளை முக்கியமாக உருவாக்கும்.

மக்கள் நாளேடு, சின்ஹுவா செய்தி நிறுவனம், சீன ஊடகக் குழுமம் முதலிய சீன நிறுவனங்கள், ரஷிய டாஸ் நிறுவனம், வியட்நாம் செய்தி நிறுவனம், கனடா செய்தி நிறுவனம் முதலிய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகிய மொத்தம் 16 நிறுவனங்களால் இந்த ஆயத்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

படம்:VCG

You May Also Like

More From Author