சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் 25ஆம் நாள் வெளிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் சீன நாடளவில் பருத்தி விளைச்சல் 61இலட்சத்து 64ஆயிரம் டன்னை எட்டி, கடந்த ஆண்டை விட 9.7விழுக்காடு அதிகரித்தது.
பருத்தி சாகுபடி பரப்பளவு மற்றும் விளைச்சல் திறன் அதிகரிப்பு ஆகிய காரணங்களால், நாடளவில் பருத்தி உற்பத்தி அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.தவிர, சீனாவின் மிகப்பெரிய பருத்தி உற்பத்திப் பகுதியான சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில், பயிரிடப்பட்ட பருத்தியின் நிலப்பரப்பு, கடந்த ஆண்டை விட 3.3விழுக்காடு அதிகரித்து, 24இலட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேராக உள்ளது.
இவ்வாண்டில் சின்ஜியாங்கில் பருத்தி சாகுபடியில் கிடைக்கும் லாபம் நிலையாக இருந்து, விவசாயிகள் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகத்தின் வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.