14ஆவது சர்வதேச அடிப்படை வசதி முதலீடு மற்றும் கட்டுமான மன்றக் கூட்டம் ஜூன் முதல் நாள், மக்கௌவில் தொடங்கியது. இதில், 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 700 நிறுவனங்களைச் சேர்ந்த துறையினர்கள் பங்கெடுத்தனர்.
நடப்புக் கூட்டத்தின் போது 40 சிறப்பு நடவடிக்கைகள் நடத்தப்படும். இந்நடவடிக்கைகளில் இத்துறை சார்ந்த சூடான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு, உலகளவில் அடிப்படை வசதிக் கட்டுமானத் துறையில் பசுமையான தொடரவல்ல வளர்ச்சிக்கான சாதனைகளும், ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளும் முழுமையாக வெளியிடப்படும். இத்தொழில் துறையின் தொடரவல்ல வளர்ச்சிக்கான புதிய உழைப்பாற்றலையும் வழிமுறைகளையும் விரைவுபடுத்துவது குறித்து இதில் கலந்துகொண்டோர் கூட்டாக ஆராய்ந்து வருகின்றனர்.