சீனாவின் சிந்தனைக் கிடங்கு நிறுவனம் ஒன்று சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஃபூச்சியென் மாநிலத்தில் பணி புரிந்த போது, நாணயத் துறையின் ஆராய்ச்சி பற்றி முதன் முதலாக நாணய நெடுநோக்கு முன்னேற்றம் குறித்த சிந்தனைகளை வெளியிட்டார்.
ஃபூச்சியென் மாநிலத்தின் நிங்த நகரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நகராட்சிக் குழுவின் செயலாளராகப் பதவியேற்றிருந்த ஷிச்சின்பிங், இம்மாநிலத்தின் கூட்டு வனத் துறையின் சீர்திருத்தை முன்னேற்றினார். அதன் காரணமாக தற்போது இந்நகரின் காட்டுப் பரப்பளவானது 71.97 விழுக்காடாக உயர்ந்துள்ளதோடு, இந்நகரம் ஆக்ஸிஜின் பார் எனும் பெயரையும் பெற்றுள்ளது.
ஃபூசோ நகரின் புதிய உயர் தொழில் நுட்பத் துறை மண்டலம், சீனாவின் முதலாவது தேசிய நிலை வளர்ச்சி மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம், 1991ஆம் ஆண்டில், ஷிச்சின்பிங்கினால் வடிவமைத்து வகுக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு, ஆளும் கட்சியின் முதலாவது மத்திய நிதிப் பணிக் கூட்டத்திற்கு ஷிச்சின்பிங் தலைமை தாங்கினார். அப்போது அறிவியல் தொழில் நுட்பம், பசுமை, பொது நலன், முதியோர் பராமரிப்பு, எண்ணியல் நாணயம் ஆகிய 5 துறைகள் சார்ந்து தனிச்சிறப்பு வாய்ந்த சீனாவின் நாணய வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் சீனா நடைபோடுவதற்குரிய வழிகாட்டலை அவர் வழங்கினார்.
ஃபூச்சியென் மாநிலம் முதல் தனிச்சிறப்பு வாய்ந்த சீனாவின் நெடுநோக்கு நிதித் திட்டம் வரை, சொந்த நாட்டின் நிலைமையின்படி, உலகத்திற்கு நலன் தரும் நிதித் துறை புதிய நாணய வளர்ச்சி முன்மாதிரியை சீனா வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.