Web team
சாதனை ! கவிஞர் இரா .இரவி !
வயது தடையல்ல
எந்த வயதிலும் புரியலாம்
சாதனை
சோதனைக்கு
வேதனைப்படாதே
சாதனை
தோல்விக்கு துவளாமல்
தொடர்ந்து முயன்றால்
சாதனை
மனதில் தீ வேண்டும்
திட்டமிட வேண்டும்
புரியலாம் சாதனை
அரசுத் தேர்வில்
ஆண்களைவிட பெண்கள்
சாதனை
முயற்சி உழைப்பு
மூலதனம
சாதனை
சோம்பேறிகளாலும்
சுறுசுறுப்பற்றவர்களாலும்
நிகழ்த்த முடியாது சாதனை.