பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
இந்திய பொருட்கள்மீதான அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாகப் பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்திய கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு 42 ஆயிரத்து 866 கோடி ரூபாயை எட்டியது என்றும் இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15.6 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜவுளி ஏற்றுமதி 1.23 சதவீதமும், ஆபரணங்கள் ஏற்றுமதி 1.24 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளதாகவும், ஐக்கிய அரபு எமிரகம், வியட்நாம், பெல்ஜியம், சவுதி அரேபியா போன்ற நாளுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
