பிரதமர், மாநில முதலமைச்சர்கள் அல்லது ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் என யாராவது கடுமையான குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுத்து வைக்கப்பட்டாலோ அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சட்ட மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இத்தகைய கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மசோதாவை அரசாங்கம் புதன்கிழமை அறிமுகப்படுத்த உள்ளது என்று மூத்த அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
முன்மொழியப்பட்ட விதிகளின் கீழ், ஒரு அமைச்சர் கடுமையான குற்றம் (ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனைக்குரிய குற்றங்கள்) குற்றச்சாட்டில் தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி அவரை பதவியில் இருந்து நீக்குவார்.
பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை:குற்றசெயல்களில் கைது செய்யப்பட்டு சிறை சென்றால் பதவி நீக்கம்!
