அசாமில் மீண்டும் மலர்கிறது தாமரை” – 73 இடங்களில் பாஜக முன்னிலை 

Estimated read time 1 min read

அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) மிகப்பெரிய வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.

மொத்தம் 126 தொகுதிகள் கொண்ட அசாமில், இதுவரை 104 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் பாஜக கூட்டணி 73 இடங்களில் முன்னிலை பெற்று, ஆட்சியைத் தக்கவைக்கத் தேவையான 64 இடங்களைத் தாண்டி அசுர பலத்துடன் உள்ளது. முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் ஆளுமை மீண்டும் ஒருமுறை அசாம் மண்ணில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், கௌரவ் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கை 100 தொகுதிகளைத் தாண்டியுள்ள நிலையில், பாஜகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான இடங்களின் வித்தியாசம் மிக அதிகமாக உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author