சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் டிசம்பர் 9ஆம் நாள் திங்கள்கிழமையன்று பெய்ஜிங்கில், 10 முக்கிய சர்வதேச பொருளாதார அமைப்புகளின் தலைவர்களுடன் இணைந்து, உரையாடல் கூட்டத்தை நடத்தி, வளர்ச்சிக்கான ஒருமித்த கருத்தை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய பொதுவான செழுமையை ஊக்குவித்தல்” என்ற கருப்பொருளில், கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
லீ ச்சியாங் கூறுகையில், பல்வேறு தரப்புகளுடன், சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடுகளையும் பலதரப்புவாத வர்த்தக அமைப்புமுறையையும் பேணிக்காக்க பாடுபட சீனா விரும்புகின்றது. அதேவேளையில், பல்வேறு சர்வதேச பொருளாதார அமைப்புகள் உலகளாவிய ஆட்சிமுறைக்கு முக்கிய பங்காற்றுவதற்கு சீனா ஆதரவு அளிக்கின்றது. மேலும், சீனா முனைப்புடன், தனது ஆற்றலுக்கு ஏற்கும் சர்வதேச பொறுப்பு ஏற்று, உலகப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை முன்னேற்றி செயல்படுத்தும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய சர்வதேச பொருளாதார அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கூறுகையில், பலதரப்புவாதம் மற்றும் உலகமயமாக்கலைப் பேணிக்காப்பதில் சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக தெரிவித்தனர். மேலும், வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கி, தாராள வர்த்தகத்தில் ஊன்றி நின்று, வளரும் நாடுகளுக்கு அதிகமான ஆதரவு அளித்து, உள்ளடங்கிய தன்மைப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, கூட்டு செழுமை மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை மேம்படுத்த விரும்புகின்றது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
புதிய வளர்ச்சி வங்கி தலைவர், உலக வங்கி தலைவர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர், உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர், ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாட்டின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட 10 சர்வதேச பொருளாதார அமைப்புகளின் பொறுப்பாளர்கள் இந்த உரையாடல் கூட்டத்தில் பங்கெடுத்தனர்.
இதனிடையில், சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் டிசம்பர் 8、9 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில், புதிய வளர்ச்சி வங்கி தலைவர் ரூசெஃப், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா, உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் ஜெனரல் இவேலா, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஜார்ஜீவா ஆகியோரை முறையே சந்தித்து உரையாடினார்.