மேற்கு வங்க அரசியலில் மம்தா பானர்ஜியின் கோட்டை ஆட்டம் காணும் வகையில், 2026 தேர்தல் முடிவுகளின் ஆரம்பகட்ட நிலவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்த கோட்டையான பவானிபூரில் பின்னடைவைச் சந்தித்துள்ளது திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம், பாஜகவின் சுவேந்து அதிகாரி பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை பெற்று ‘இரட்டை அதிரடி’ காட்டி வருகிறார்; நந்திகிராமில் மட்டும் சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முந்தியுள்ளார்.
மாநிலம் முழுவதும் பாஜக 135 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 110 இடங்களிலும் முன்னிலை பெற்று வருவதால், வங்காள மண்ணில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதற்கிடையே, தமிழகத் தேர்தல் நிலவரப்படி திமுக 59 இடங்களுடன் வலுவாக முன்னிலை வகிக்க, அதிமுக வெறும் 3 இடங்களில் மட்டுமே தத்தளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
