மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக அதிசயங்களில் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே எழுந்து வந்தது. தமிழரின் கட்டிடக்கலை, சிந்தனை, ஆன்மிகம் ஆகியவை ஒருங்கிணைந்த சிறப்பை வெளிப்படுத்தும் இந்த கோவில், “எட்டாவது உலக அதிசயம்” என அழைக்கப்படுவதற்குரியதுதான் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு சிறந்த சான்றாக தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மதுரையில் பெய்த கனமழையின்போது மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள கட்டிடங்களில் பெய்த மழைநீர் வீணாகாமல், நேரடியாக கோவிலின் தெப்பக்குளத்தில் ஓடி வந்து சேரும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
Meenakshi Amman temple when it rains
Perfect water management pic.twitter.com/zKQ4jdzPPY— Anu Satheesh
(@AnuSatheesh5) October 22, 2025
“>
அந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள், “இது தான் தமிழர்களின் தொன்மையான கட்டிடக்கலை நுணுக்கம்; மழைநீரின் மதிப்பை உணர்ந்த நமது முன்னோர்களின் அறிவு இதிலே வெளிப்படுகிறது” என பாராட்டி வருகின்றனர். ஆறாக ஓடி வரும் மழைநீர் நேரடியாக தெப்பக்குளத்தில் கலக்கும் அந்த காட்சி, கோவில் வடிவமைப்பின் அறிவியல் திறமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்மையில் உலக அதிசயப் பட்டியலில் இடம்பெற வேண்டிய அரிய படைப்பு” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



