தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் 3-வது சுற்று முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி தான் போட்டியிட்ட 18 தொகுதிகளில் சோளிங்கர், பென்னாகரம், தருமபுரி, செஞ்சி, விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 முக்கியத் தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் பாமகவின் இந்த வலுவான முன்னிலை அக்கூட்டணியினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், அதே கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தச் சுற்று முடிவுகள் கலவையான முடிவுகளையே தந்துள்ளன.
மேலும் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தளி, உதகை மற்றும் நாகர்கோவில் ஆகிய 3 இடங்களில் மட்டுமே தற்போது முன்னிலையில் உள்ளது. மீதமுள்ள 24 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கை அடுத்தடுத்த கட்டங்களை எட்டும்போது இந்த நிலையில் மாற்றங்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
