கடந்த 2 ஆண்டுகளில், உயிரி மருத்துவம் மற்றும் மருந்துத் துறை சார்ந்த உலகப் பெரு நிறுவனங்கள் சீனச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றன.
டென்மார்க் நாட்டின் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் 2024ஆம் ஆண்டில் சீனாவில் 400கோடி யுவான் முதலீடு செய்ததையடுத்து.
இவ்வாண்டின் ஜூலை மாதத்தில், தியென்ஜிங் மாநகரில் 80கோடி யுவான் மதிப்புள்ள திட்டப்பணியில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. பெரிய சந்தை, சீன அரசின் கொள்கை ரீதியிலான ஆதரவு முதலியவற்றால், ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கம் மூலம், சீனாவுடன் ஒன்றுக்கொன்று நன்மை தரும் கூட்டு வெற்றி பெற முடியுமென நம்புவதாக இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுத் தலைவர் ஹெல்ஜ் லண்ட் தெரிவித்தார்.