இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஒப்பந்தம் வரும் ஜனவரி 27 அன்று கையெழுத்திடப்படலாம் என்று டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த FTA ஒப்பந்தம் மூலம், இரு தரப்பிற்கும் இடையேயான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு உறவுகள் வலுப்பெறும்.
குறிப்பாக, இந்திய தயாரிப்புகளுக்கு ஐரோப்பிய சந்தையில் தடையில்லாத அணுகல் கிடைக்கும் என்றும், ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் இந்தியாவில் எளிதாக வர்த்தகம் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாக அமையும் என வணிக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய FTA ஜனவரி 27 அன்று கையெழுத்தாகிறது
