விசிகவின் சட்டமன்ற குழு தலைவராக வன்னி அரசு தேர்வு… திருமா அதிரடி அறிவிப்பு…!! 

Estimated read time 0 min read

தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றிய உள்ள நிலையின் பெரும்பான்மையின் நிரூபிக்க 118 இடங்கள் இல்லாததால் திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகி அமைச்சரவையில் பங்கு கேட்டு தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து ஆதரவு கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்த நிலையில் ஆதரவை மட்டும் கொடுப்பதாக கூறியது. இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 117 ஆக உயர்ந்த நிலையில் 118 என்ற மேஜிக் நம்பர் கிடைக்காததால் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் தமிழக வெற்றி கழகம் ஆதரவு கேட்ட நிலையில் தற்போது திருமாவளவன் அதற்கு சம்மதம் தெரிவித்து ஆதரவு கடிதத்தை தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் வழங்கினார். மேலும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திருமாவளவன் கடிதத்தை கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்போது 118 என்ற மேஜிக் நம்பர் விஜய்க்கு கிடைத்துள்ளதால் விரைவில் அவர் ஆட்சி அமைக்க இருக்கிறார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக வன்னி அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author