புரட்டாசி, பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால், இந்த மாதத்தில் இந்துக்களில் பலர் விரதம் இருந்து, பெருமாளை வழிபடும் வழக்கம் உள்ளது.
மீன் உள்ளிட்ட அசைவ உணவை தவிர்த்து விடுகின்றனர். இதனால், கோவை உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டில், மீன் விலை குறைந்துள்ளது.
நேற்று உக்கடம் மீன் மார்க்கெட்டில் வஞ்சிரம், 450 ரூபாய்க்கும், வெள்ளை ஊளி, 160 ரூபாய்க்கும், மஞ்சப்பாறை 380 ரூபாய்க்கும், கண்ணாடி பாறை 500 ரூபாய்க்கும், கருப்பு வாவல் 450 ரூபாய்க்கும், சாளை மத்தி 200 ரூபாய்க்கும், கிளாத்தி, 300 ரூபாய்க்கும், கறிமீன் 320 ரூபாய்க்கும், கிளி மீன் 450 ரூபாய்க்கும், அயிலை 160 ரூபாய்க்கும், பொன்னாம்பாறை 200 ரூபாய்க்கும், கிழங்கான் 180 ரூபாய்க்கும், நெத்திலி 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
உக்கடம் லாரி பேட்டை மீன் மார்க்கெட் மொத்த விற்பனையாளர் சங்க செயலாளர் காதர் கூறுகையில், ”புரட்டாசி மாதத்தில் மீன் விலை குறைவது வழக்கம். மீன் வரத்தும் அதிகமாக இருக்கும். 1000 ரூபாய்க்கு விற்ற வஞ்சிரம். இப்போது 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது.