
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க இருக்கிறது. 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை கிடைக்காததால் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் காலதாமதம் செய்தார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முஸ்லிம் லீக் கட்சி போன்றவர்கள் ஆதரவு கொடுத்துள்ளதால் நடிகர் விஜய்க்கு தற்போது 120 என்ற பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவர் விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை முதல்வர் பதவி கேட்டதாக ஒரு தகவல் பரவிய நிலையில் திருமாவளவன் முன்பு பேசிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் துணை முதல் அமைச்சர் எல்லாம் ஒரு பொறுப்பே கிடையாது. அது ஒரு அற்பமானது துணை முதலமைச்சர் என்பது பவர்ஃபுல் பதவி கிடையாது. கூட்டணி ஆட்சி என்பது ஓகே தான். ஆனால் துணை முதலமைச்சர் பதவி என்பது தேவையில்லாத ஒன்று. அந்த கோரிக்கையில் எந்தவிதமான அர்த்தமும் கிடையாது எதற்காக திருமாவளவன் துணை முதல்வர் என்று கூறுகிறீர்கள் முதல்வர் என்று ஏன் சொல்ல மாட்டீர்கள் என்று கேட்டார். மேலும் திருமாவளவன் விஜய்க்கு வெளியே இருந்து மட்டுமே ஆதரவு கொடுத்த நிலையில் திமுக கூட்டணியில் தான் தொடர்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துணை முதலமைச்சர் எல்லாம் ஒரு பதவியே இல்லனு சொல்லிட்டு இப்போ எதுக்கு டிமாண்ட் பண்ணனும்!
pic.twitter.com/cEZv5qczcz
— Suresh (@Suresh199104) May 9, 2026

