தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு தெரிவித்துள்ளது – ஆதவ்!

Estimated read time 0 min read

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கழகம் (விசிக) அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தவெகவுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன் சார்பில் வழங்கப்பட்ட ஆதரவுக் கடிதத்தை தவெக ஆதவ் அர்ஜுனா பெற்றுக்கொண்டார். இந்த முக்கிய நிகழ்வு தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைவதை உறுதிப்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகளின்படி தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன்பின் காங்கிரஸ் (5), சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 116 ஆக உயர்ந்த நிலையில், விசிகவின் ஆதரவு 118 ஆக உயர்த்தியுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மை (118) இப்போது தவெகவுக்கு கிடைத்துள்ளது.

ஆதரவுக் கடிதம் வழங்கப்பட்டது தவெக தரப்பில் ஆதவ் அர்ஜுனா கடிதத்தை பெற்றுக்கொண்டார்.இந்த ஆதரவு அறிவிப்பால் தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜயை ஆட்சியமைக்க அழைக்கும் நிலை விரைவில் உருவாகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தவெகவுக்கு இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் மற்றும் விசிக ஆகியவற்றின் ஆதரவு கிடைத்துள்ளதால், தமிழ்நாட்டில் புதிய அரசு அமைவது இப்போது உறுதியாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author