தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் நீலாங்கரையில் இருந்து புறப்பட்டு தற்போது பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தை வந்தடைந்தார்.
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், விஜய்யின் இந்த வருகை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அவர் வீடு திரும்பியதைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கம் இல்லத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தவெக தொண்டர்கள் அங்கே குவிய வாய்ப்புள்ளதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என அரசியல் வட்டாரமே இப்போது பட்டினப்பாக்கத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
