தமிழக அரசியலில் தவெக ஆட்சி அமைக்க விசிக-வின் ஆதரவு ஒருபுறம் உறுதியாகிவிட்டதாகத் தெரிந்தாலும், கோட்டை அரியணையில் ஏறுவதில் விஜய்க்கு இன்னும் பெரிய ‘செக்’ காத்திருப்பதாக அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன் அதிரடி கணிப்பை வெளியிட்டுள்ளார்.
விசிக ஆதரவு கடிதம் கொடுத்தாலும், அதை ஆளுநர் உடனே ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகமே எனக் கூறியுள்ள அவர், ஏற்கனவே எழுந்துள்ள “போலி கையெழுத்து” புகார்களைக் காரணமாக வைத்து, ஒவ்வொரு கடிதத்தையும் ஆளுநர் தீவிரமாகச் சரிபார்க்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்றைய அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஆளுநர் மாலை கேரளாவுக்குப் புறப்பட்டுச் செல்லவிருப்பதால், ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு விடுப்பதில் பெரும் காலதாமதம் ஏற்படலாம் என்றும் இது விஜய்யின் முதலமைச்சர் கனவுக்கு ஒரு தற்காலிகத் தடையாக மாறலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால், விசிக-வின் ஆதரவு என்பது விஜய்க்கு ஒரு நிம்மதியைக் கொடுத்தாலும், ஆளுநர் மாளிகையின் அடுத்த கட்ட ‘மூவ்’ என்னவாக இருக்கும் என்ற திக் திக் நிமிடங்கள் அதிகரித்துள்ளன.
