அமெரிக்காவின் பியூ ஆராய்ச்சி மையம் அண்மையில் வெளியிட்ட ஆண்டு கருத்து கணிப்பின்படி, கணக்கெடுக்கப்பட்ட 36 நாடுகள் மற்றும் பிரதேசங்களில், 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் மக்களிடையில் அமெரிக்காவை விட சீனா மீதான நேர்மறை கருத்து அதிகமாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
இந்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள சுமார் 20 ஆண்டுகளாக உலகளாவிய பொதுக் கருத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான திருப்புமுனைகளில் இது ஒன்றாகும். பல நாடுகளின் ஊடகங்கள் இது பற்றி அதிகமாக விவாதித்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் பேர்ல்ஸ் அன்ட் இரிடேஷன்ஸ் இணையதளம், பியூவின் கணிப்பு முடிவை மேற்கோள் காட்டி, 17 இடைநிலை வருமானம் பெறும் நாடுகளின் மக்கள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை குறித்த கவலை சீனாவைப் பற்றியதை விட அதிகமாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நாடுகளில் தான் அமெரிக்காவை விட சீனா மிகவும் நம்பகமானது என்றும், சீனா உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பங்களிப்பு செய்துள்ளது என்றும் அதிகமான மக்கள் கருத்து தெரிவித்தனர். சீனாவும் அதன் தலைவர்களும் உலக தெற்கு நாடுகளில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளனர். அமெரிக்காவின் மென்மையான சக்தி விரைவாக இழந்து வருவதையும், சீனாவின் ஒளி மேலும் பிரகாசமடைந்து வருவதையும் இந்த கருத்துக் கணிப்பு தெளிவாக பிரதிபலிக்கிறது என்று இந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
ஒத்துழைப்பையும் கூட்டு வெற்றியையும் சீனாவின் பேச்சு முறைமை ஊக்குவிக்கிறது. உலக ஒழுங்கில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வலியுறுத்துகிறது என்றும், அதே நேரத்தில் அமெரிக்கா இந்த ஏற்றத்தாழ்வு நிலையை நிலைநிறுத்துவதில் தினமும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது என்றும் டி ஜப்பான் டைம்ஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
