விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் பாகிஸ்தானுக்கு சமீபத்தில் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹8,000 கோடிக்கு மேல்) வழங்கியதை சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) நியாயப்படுத்தி பேசியுள்ளது.
அந்தத் தொகைக்கான தேவையான அனைத்து இலக்குகளையும் பாகிஸ்தான் அடைந்ததன் அடிப்படையிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்தியா நடத்திய இராணுவத் தாக்குதலான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து அதிகரித்த இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய மண்ணில் தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் அளித்து வருவதாக வாதிட்டு, இந்தியா பாகிஸ்தானுக்கு நிதி வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.