இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்து சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு கிடைக்கும் என, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், இந்தியா- நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்ததைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மகாநவமி நாளில் கொண்டாட்டங்களைத் தொடங்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். துர்கா தேவியின் சக்தி வடிவத்தை வழிபடும் இந்தப் புனித நாளில், இந்தியா-நியூசிலாந்து உறவில் மறைந்திருக்கும் வலிமையும் புதிய வாய்ப்புகளும் வெளிப்படத் தொடங்கியுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்து சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரியில்லா அணுகல் கிடைப்பதாகவும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா – நியூசிலாந்து இடையேயான வர்த்தகத்தை 7 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
