சீனா ரயில்வே குழுமம் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் நவம்பர் திங்கள், சீனாவில் இருப்புப்பாதையின் மூலம் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் அளவு 35 கோடி டன்னை எட்டியது.
கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 5.5 விழுக்காடு அதிகமாகும்.
மேலும், தினசரியாக சரக்கு ஏற்றிச் செல்லும் தொடர்வண்டி பெட்டிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்தைத் தாண்டி, வரலாற்றில் மிக அதிகமாகும்.