சீனாவின் ஷேன்சி மாநிலத்தின் சி அன் நகரில் 9ஆவது பட்டுப்பாதை சர்வதேசக் கண்காட்சி 21ஆம் நாள் துவங்கியது. சீன அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் துணை தலைவர் ஷேன் யியேயியே இக்கண்காட்சியின் துவக்க விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கூட்டு கட்டுமானத்தை உயர் தரமான முறையில் முன்னேற்றுவது பற்றிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உத்தரவுகளைச் செயல்படுத்தி பயனுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, புதிய வளர்ச்சி வாய்ப்புகளை விரிவாக்குவது நடப்பு கண்காட்சியின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
நடப்புக் கண்காட்சியில் பல்வேறு பொருளாதார மற்றும் வர்த்தக முதலீட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.