பெட்ரோல், டீசல் விலை உயர்வு; லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு  

Estimated read time 0 min read

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன.
இந்த விலை உயர்வு இன்று (மே 15, 2026) முதல் அமலுக்கு வருகிறது.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த 11 வாரங்களாக விலையை மாற்றாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது நஷ்டத்தைத் தவிர்க்க இந்த உயர்வை அறிவித்துள்ளன.
புதிய பெட்ரோல் விலை (லிட்டருக்கு):
டெல்லி: ரூ. 97.77
சென்னை: ரூ. 103.67
மும்பை: ரூ. 106.68
கொல்கத்தா: ரூ. 108.74

You May Also Like

More From Author