சில காட்சிகள் நீக்கப்பட்டும், வசன மாற்றங்கள் இருந்தபோதிலும், CBFC, ரஜினிகாந்தின் வரவிருக்கும் படமான ‘கூலி’க்கு ‘A’ சான்றிதழ் அளித்துள்ளது.
இது போக, மதுபான பிராண்டின் பெயரை மாற்றுவது, மது அருந்துதல் எச்சரிக்கையைச் சேர்ப்பது மற்றும் பிற படங்களின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு NOC பெறுவது ஆகியவை பிற மாற்றங்களில் அடங்கும்.
இந்த மாற்றங்களைச் செய்த பிறகு, ‘கூலி’க்கு, ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இருப்பினும், படத்தின் தொடக்கத்தில் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு, 25 வினாடிகள் நீளமான அனிமேஷன் அஞ்சலியைச் சேர்க்க தயாரிப்பாளர்கள் CBFC-ஐ அணுகினர்.
இதை சேர்த்ததால், ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடங்களிலிருந்து, 2 மணி நேரம் 50 நிமிடங்களாக நீண்டது என பாலிவுட் ஹங்கமா தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் சிறப்பு காணொளி ‘கூலி’யில் இடம்பெறுகிறது!
