ரத்தான நீட் தேர்விற்கு புதிய தேதி அறிவிப்பு: ஜூன் 21-ல் மறுதேர்வு  

Estimated read time 1 min read

மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET UG 2026) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கான மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி அந்தத் தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த செவ்வாயன்று அறிவித்தது.
தற்போது இந்தத் தேர்விற்கான மாற்றுத் தேதியை NTA வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 21, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மறுதேர்வு நடைபெறும்.

You May Also Like

More From Author