பல ஒத்தக் கருத்துக்களை உருவாக்கிய சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள்

அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்பின் சீனப் பயணம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இரு நாடுகள் மற்றும் உலகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு அரசுத் தலைவர்கள் விரிவாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, பல ஒத்தக் கருத்துக்களை எட்டியுள்ளனர் என்றார்.

மேலும், “சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு நிலைத் தன்மை வாய்ந்த உறவை”கூட்டாக உருவாக்குவதை, சீன-அமெரிக்க உறவின் புதிய திசையாக கொள்வதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். அடுத்த 3 ஆண்டுகளில் சீன-அமெரிக்க உறவுக்கு இது நெடுநோக்கு வழிக்காட்டலை வழங்குவதோடு, இரு நாட்டுறவின் நிதானமான, சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றி, உலகத்துக்கு மேலதிக அமைதி, செழுமை மற்றும் முன்னேற்றங்களையும் விளைவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author