MBBS மாணவர்களிடம் 4½ ஆண்டுகளுக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது – அமைச்சர் அருண்ராஜ்..!

Estimated read time 0 min read

எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை முதல் நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டிலுள்ள பல மருத்துவ கல்வி நிறுவனங்கள் 5 ஆண்டுகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் மாணவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?” என்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொண்டுவந்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், “எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்கள் நான்கரை ஆண்டுகள் மருத்துவ படிப்பும், ஒரு ஆண்டு பயிற்சி படிப்பும் படிப்பதுதுதான் விதி. ஆனால் நான்கரை வருடங்கள் கடந்து மேலும் 6 மாதத்திற்கான கல்வி கட்டணத்தை பல்வேறு கல்வி நிறுவனங்கள் வசூலித்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசின் சு சார்பில் தற்போது ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், வரையறுக்கப்பட்டதை விட அதிகமாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக 11 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் இந்த புகார் குறித்து ஆராயும்பொழுது மாணவர்கள் தரப்பில் அதிக கட்டணம் வழங்கியதற்கான ஆவணம் இல்லாமல் இருந்தது.

இருப்பினும் இந்த புகார்களின் அடிப்படையில் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், விதிகளை மீறி நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

You May Also Like

More From Author