திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு வழியில் வெற்றிபெற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மூலம் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கையில் எடுத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை S.I.R. மூலம் நீக்கிய தேர்தல் ஆணையம் தற்போது அதனை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஆனால், தமிழர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் பெருங்கடமையும், பொறுப்பும் தி.மு.கழகத்திற்கு என்றும் உண்டு.
எனவே, S.I.R. எனும் அநீதியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட – ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட – என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில் செயல்படுத்துவதற்காக இன்று (28.10.2025) செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் (Confluence Hall)ல் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 8,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் வேலை [மேலும்…]
திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு [மேலும்…]
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையின் மூலம், சென்னை ஆலந்தூர் பகுதியில் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம் இன்று [மேலும்…]
இந்தியக் குடிமக்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். வயது வரம்பு கிடையாது. எந்தவொரு தபால் அலுவலகத்திலும் எளிதாகக் கணிக்கு திறக்க முடியும்.இணைய தபால் வங்கி மூலமாகவும் [மேலும்…]
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் விடுதலை போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். மருதுபாண்டியர் சகோதரர்கள் [மேலும்…]
இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 17 இடங்களும், கேரளாவில் [மேலும்…]
வரவிருக்கும் முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, தொடக்க ஆட்டக்காரர் ப்ரத்திகா ராவல் ஐசிசி மகளிர் [மேலும்…]