சீன ரயில்வே குழுமம் வெளியிட்ட தகவலின்படி, அக்டோபர் முதல் நாள், சீனத் தேசிய விழாவாகும். நாட்டளவில் தொடர்வண்டியின் மூலம் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்நிலையில் இருந்து, 2 கோடியே 48 லட்சத்தை எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2324 தொடர்வண்டிகள் அதிகரிக்கப்பட திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் நாள் நாட்டளவில் தொடர்வண்டியின் மூலம் பயணம் மேற்கொண்ட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 95 லட்சத்து 42 ஆயிரத்தை எட்டியது. போக்குவரத்து பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் உள்ளது.
மேலும், குவாங்சோ, பெய்ஜிங், ச்செங்தூ, ஷாங்காய், ஹாங்சோ உள்ளிட்ட நகரங்கள், சுற்றுலா செல்வதற்கான முக்கிய இடங்களாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
