சீன-அமெரிக்க உறவுகள் குறித்த கேள்விகளுக்கு சீனா பதில்

சீன-அமெரிக்க வர்த்தக மற்றும் பொருளாதார உறவு, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் தொடர்பு முதலியவை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவொ ஜியகுன் 15ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சீனாவுக்கு அமெரிக்காவுக்கு இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவின் சாரம்சமானது, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது ஆகும். இருநாட்டு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கும் உலகப் பொருளாதாரத்துக்கும் இரு தரப்பும் கூடுதல் நிலைத்தன்மை அளிக்க வேண்டும் என்றார். மேலும், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் இவ்வாண்டுக்குள் சந்திப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து இரு நாடுகளும் தொடர்பை வைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தவிர, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் சீனாவில் பயணம் மேற்கொண்டபோது. வர்த்தக மற்றும் பொருளாதார உறவின் நிலைதன்மையை பராமரிப்பது, பல்வேறு துறைகளிலான நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்புகளை விரிவாக்குவது, உரிய முறையில் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பது ஆகியவை குறித்து இரு தரப்பும் முக்கிய பொது கருத்துக்களை உருவாக்கியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author