இவ்வாண்டில் சீனாவின் செயற்கை நுண்ணறிவு தொழிலில் தீவிர வளர்ச்சி போக்கு காணப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் மைய தொழிலின் மதிப்பு, ஒரு இலட்சம் கோடி யுவானைத் தாண்டக் கூடும் என்று சீனத் தகவல் தொடர்பு ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.
இவ்வாண்டில் தயாரிப்பு சங்கிலியில் பெரும் மாதிரிகளின் பயன்பாடு, குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. அவற்றின் பயன்பாட்டு விகிதம், கடந்த ஆண்டில் இருந்த 19.9 விழுக்காட்டிலிருந்து 25.9 விழுக்காடாக உயர்ந்தது. இதனால் செயற்கை நுண்ணறிவு தொழில் விரைவாக வளர்ந்து வருகிறது என்று தரவுகள் காட்டுகின்றன.
நுகர்வு சந்தையில், புதிய நுகர்வு நிலைமை உருவாக்குவது, நுகர்வு கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றை நுண்ணறிவு பொருளாதாரம் முன்னெடுத்து வருகிறது. இவ்வாண்டின் முதல் 10 திங்களில் ஏஐ கண்ணாடி, நுண்ணறிவு கடிகாரம் முதலிய பொருட்களின் விற்பனை, 23.1 விழுக்காடு அதிகரித்தது. நுகர்வு முன்னெடுப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தீவிரமாக்குவதற்கு, நுண்ணறிவு பொருட்கள் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன.
படம்:VCG
