பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை செண்ட்ரல்-கும்மிடிபூண்டி இடையே இன்றும் நாளை மறுநாளும் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை மக்களின் போக்குவரத்து தேவையில் சென்னை மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவ்வபோது பராமரிப்பு பணிகளுக்காக மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை செண்ட்ரல்-கும்மிடிபூண்டி இடையே இன்றும் நாளை மறுநாளும் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 15, 17 ஆகிய 2 தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கவரப்பேட்டை யார்டு பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் 19 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொன்னேரி மீஞ்சூர் வரை மட்டுமே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.