ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு பள்ளிக்கல்வித் துறையின் அனுமதியை பெறத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு சுருக்கமாக டெட் தேர்வு என்பது 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. இத்தேர்வு 2 தாள்கள் கொண்டு நடைபெறும். முதல் தாள் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தகுதித்தாளாகவும், 2ஆம் தாள் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கவும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக இத்தேர்வு நடைபெறாத நிலையில் தொடர் கோரிக்கையையடுத்து இந்த ஆண்டு நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு பள்ளிக்கல்வித் துறையின் அனுமதியை பெறத் தேவையில்லை, தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் துறை அனுமதி பெற அவசியம் இல்லை என முதன்மை கல்வி அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 4.8 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர்.
பணியில் உள்ள ஆசிரியர்கள் கட்டாயம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக வழக்கத்தை விடவும் அதிகமானோர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க செப் 10 வரை அவகாசம் அளித்த நிலையில், விண்ணப்பத்தில் நாளை வரை திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.