OMG.! காமக்கொடூர்களை அலற வைக்கும் கருவி…! “பிறப்புறுப்பையே கிழித்து விடும்”… பெண்கள் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க டாக்டர் கண்டுபிடித்த ஆயுதம்..!! 

Estimated read time 1 min read

உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்காப்புக்காக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவ தொழில்நுட்பவியலாளர் ஒருவர் உருவாக்கியுள்ள ‘ஆண்டி-ரேப் காண்டம்’ (Anti-Rape Condom) எனப்படும் ‘ரேப்-எக்ஸ்’ (Rape-aXe) கருவி குறித்த தகவல்கள் இணையத்தில் மீண்டும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

மருத்துவ தொழில்நுட்பவியலாளரான டாக்டர் சோனெட் எஹ்லர்ஸ் என்பவர், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பல பெண்களின் கதைகளைக் கேட்டு இந்த விநோத சாதனத்தை உருவாக்கியுள்ளார். ஒருமுறை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், “பாதிப்பின் போது எனது பிறப்புறுப்பில் பற்கள் இருந்திருக்கக் கூடாதா?” என்று வலியோடு கேட்ட வார்த்தை, தன்னை 40 ஆண்டுகள் உழைக்க வைத்து இந்தக் கருவியை உருவாக்க தூண்டுகோலாக இருந்தது என டாக்டர் சோனெட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு முதன்முதலில் பொதுவெளியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கருவி, பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்தக் கருவியை தங்களின் பிறப்புறுப்பில் பொருத்திக் கொள்ளலாம். இதன் உள்பகுதியில் உள்நோக்கி வளைந்த கூர்மையான கொக்கிகள் போன்ற பற்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

பாலியல் குற்றவாளி ஒருவர் பெண்ணைத் தாக்க முற்படும்போது, அவரது உறுப்பு எளிதாக உள்ளே சென்றுவிடும். ஆனால், அவர் பின்வாங்க முயலும்போது அந்தக் கூர்மையான கொக்கிகள் குற்றவாளியின் உறுப்பில் ஆழமாகப் பதிந்துவிடும். இதனால் ஏற்படும் கடுமையான வலியால் குற்றவாளி உடனடியாகக் காயமடைந்து அலறுவான். மிக முக்கியமாக, இந்தச் சாதனத்தை ஒரு அறுவை சிகிச்சை நிபுணரால் மட்டுமே ஆபரேஷன் செய்து அகற்ற முடியும். இதனால் குற்றவாளி உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும், அங்கு மருத்துவர்கள் மற்றும் போலீஸார் அவரை எளிதாகக் கைது செய்ய முடியும்.

தென்னாப்பிரிக்காவில் பாலியல் குற்றங்கள் மிக அதிகம் என்பதால், பெண்களுக்கு இது ஒரு சிறந்த ஆயுதமாகக் கருதப்பட்டாலும், இது குறித்து பல்வேறு விவாதங்களும் எழுந்துள்ளன. இக்கருவி ஆண்களுக்கு எதிரானது என்றும், இதனால் கோபமடையும் குற்றவாளி பெண்ணை இன்னும் கொடூரமாகத் தாக்கக்கூடும் என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், “இதன் நோக்கம் பழிவாங்குவது அல்ல, பெண்களைக் காப்பாற்றி குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவது மட்டுமே” என்று டாக்டர் எஹ்லர்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த ‘ரேப்-எக்ஸ்’ கருவி கடந்த 2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் விநியோகிக்க திட்டமிடப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் இன்னும் வணிக ரீதியாகப் பெரிய அளவில் சந்தைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களில் இக்கருவி இப்போதும் முக்கிய இடம்பிடித்து வருகிறது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author