பிரபல நடிகர் முத்துகாளையின் மனைவி 47 வயதில் காலமானார் 

Estimated read time 0 min read

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் முத்துகாளை. அவரது மனைவி மாலதி (47). இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலை 9:00 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

சமீபத்தில் தன்னுடைய மனைவிக்கு உடல் நலம் சரியில்லை எனவும் முதலமைச்சர் விஜய் உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு சென்று தேவையான உதவிகளை செய்யுமாறு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது முத்துக்காளை மனைவி மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author