கேரள முதலமைச்சராக சதீசன் பதவியேற்பு – ஆளுநர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

Estimated read time 0 min read

கேரள முதலமைச்சராக பதவியேற்று கொண்ட சதீசனுக்கு ஆளுநர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசில் முதலமைச்சர் பதவிக்கு அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதலமைச்சராக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இந்நிலையில், திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் வி.டி.சதீசன் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.

அவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் வி.டி சதீசனுடன் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட 20 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.

இந்த விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

More From Author