இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் தந்தால் ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நிச்சயம் – ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை!

Estimated read time 1 min read

இந்தியாவுக்கு பாகிஸ்தான் குடைச்சல் தந்தால், ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நடத்தப்படும் என ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில், 150-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்துார் இன்னும் முடியவில்லை என்றும், தற்போது நீடிப்பது தற்காலிக போர் நிறுத்தம் மட்டும்தான் எனவும் கூறினார்.

முப்படைகளும் ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நடவடிக்கைக்கு தயாராகி வருவதாகவும், அத்தகைய சூழல் ஏற்படாமல் பாகிஸ்தான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். பாகிஸ்தான் குடைச்சல் தந்தால், ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நடத்தப்படும் எனவும் உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்தார்.

You May Also Like

More From Author