ஹார்முஸ் நீரிணையில் பயணித்த மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திடீர் ராணுவ நடவடிக்கையால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, தென் ஈரானின் பல்வேறு பகுதிகளில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா -ஈரான் இடையே மீண்டும் வெடித்தது போர்: 3 வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல், பதிலடி கொடுத்த அமெரிக்க ராணுவம்
