இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை 2026 ஆம் ஆண்டிற்குள் 120 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ள நிலையில், சீனா கொண்டு வந்துள்ள புதிய விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் இந்த கனவுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.
கடந்த 2015ல் வெறும் 8.6 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, கடந்த 2025 ஆம் ஆண்டில் 47 பில்லியன் டாலராகச் சாதனை வளர்ச்சி பெற்றது.
இந்த அசுர வளர்ச்சியைத் தடுத்து, உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கித் தங்களது தொழிற்சாலைகளை மாற்றுவதைத் தடுக்கும் நோக்கில் சீனா தற்பொழுது தனது ஏற்றுமதி விதிகளைக் கடுமையாக்கியுள்ளது.
இந்தியாவுக்கு சீனா வச்ச செக்!
